விஜய் டிவி ஆரம்பித்த போது இதன் புகழ் பரவ முக்கியமா காரணங்களில் ஒன்று இதில் ஒளிபரப்பான சீரியல், மற்ற தொலைக்காட்சிகளில் வில்லத்தனம், அழுகை, மாமியார் மருமகள் தொல்லை என ஒரே மாதிரியான கதையை எடுக்க, இங்கு சற்று வித்தியாசமாக ஒளிபரப்பட்டது.
கனகாணும் காலங்கள், லொள்ளு சபா போன்று ஒளிபரப்பப்பட்டன. இதில் மிகவும் பிரபலமான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் மிகவும் பிரபலம் அடைந்து பட்டி தொட்டி எங்கும் இதன் புகழ் உயர்ந்தது. இதில் வரும் ஏலேலோ பாடல் பலர் போன்களின் ரிங்க்டோனாக இருந்தது.
இந்நிலையில் இதில் நடித்த செந்தில் ஸ்ரீஜா இருவரும் திருமணம் செய்துகொண்டனர், செந்தில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடங்களில் அசத்தி வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் காட்சிகளை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என செந்திலும் அன்பு கட்டளை வைத்து வருகின்றனர்.