Saturday, May 4, 2024
-- Advertisement--

பிக் பாஸ் அப்டேட் வந்தாச்சு.. நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிமுக காணொளி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுக காணொளி வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்றான பிக்பாஸ் எப்போது தொடங்கும் என மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா இல்லையா என மக்கள் எண்ணிய நிலையில் அறிமுக காணொளியை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் கடந்த நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் பிக் பாஸ் சீசன் 5 தொடங்க விருப்பதை நடிகர் கமலஹாசன் அறிமுக காணொளியை வெளியிட்டு உள்ளார். இந்த காணொளியில் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி என பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர், இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வருவார்கள் என மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles