தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வெளியே செல்ல கூடாது, மேலும் கூட்டம் சேரும் இடத்திற்கோ, பொது இடங்களுக்கோ செல்ல கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் பேர் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர் . இதனால் சின்ன திரை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
எப்போதும் புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் தொலைக்காட்சி, தற்போது புது முயற்சியாக வீட்டில் இருந்தபடியே ஒரு புத்தம் புது நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வைரலாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என அனைவர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு கூடி உள்ளது.