தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலில் ஹீரோவாக விஜய் சேதுபதி அவர்கள் நடித்த படம் தென்மேற்கு பருவக்காற்று ஆகும்.
இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார் உடன் அவர் நடித்திருந்த வில்லன் கேரக்டர் அவருக்கு கை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அவர் பீட்சா படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. சில படம் படுதோல்வி படமாக அமைந்தது. ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் தனக்கு மார்க்கெட் உள்ளவரை எல்லா கதாபாத்திரங்களில் நடித்திட வேண்டும் என்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அதனை தொடர்ந்து சமீபத்தில் ஷாருகான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் பிளாப் படத்தில் ஒரு படம் தான் லாபம். லாபம் என்று பெயர் வைத்து பெரிய நஷ்டத்தை சந்தித்தார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் அவர்கள் நடித்து இருந்தார்.
லாபம் படத்தின் கதைக்களம் ஆனது விஜய் சேதுபதி அவர்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதையும் விஜய் சேதுபதி அவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார்.
முதலில் இப்படத்துக்கு ஜோடியாக விஜய் சேதுபதி அவர்களுக்கு க்ரீத்தி ஷெட்டியை பரிந்துரைத்தார்கள். ஆனால் விஜய் சேதுபதி அவர்களோ அதை மறுத்துவிட்டார்.
க்ரித்தியை மறுத்ததற்கான காரணம் என்னவென்று அவர் தற்பொழுது கூறியுள்ளார். அவர் கூறுகையில் லாபம் படம் இயக்கும் போது தெலுங்கில் “உப்பெனா” என்னும் படத்தில் க்ரித்தியும் விஜய் சேதுபதி அவர்களும் நடித்துள்ளார்கள். அந்த படத்தில் க்ரித்தி அவருக்கு மகளாக நடித்த காரணத்தினால் தெலுகுவில் தந்தையாக நடித்துவிட்டு தமிழில் ரொமான்ஸ் செய்ய முடியாது என்பதனால் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி க்ரித்திக்கும் தன் மகனுக்கும் ஒரே வயது தான் இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி அவருடன் ரொமான்ஸ் செய்து நடிப்பது, நான் எப்பொழுதும் அவருடன் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.