விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடுகிறார்.

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் கதைப்படி இரண்டு ஹீரோயின்கள் ஒரு ஹீரோ இவர்களுக்குள் நடக்கும் முக்கோண காதல் கதை என்பது தான் ஒன்லைன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் த்ரிஷா நடிக்கிறார் என்று முதலில் தகவல்கள் வெளிவந்தது.

சமந்தாவின் கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் த்ரிஷாவை தான் அணுகினார்களாம். என்ன நினைத்தாரோ திரிஷா திடீரென்று நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். ஏற்கனவே நயனுக்கும் த்ரிஷாவிற்கும் சில மறைமுக வாக்குவாதங்கள் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே.

அதன்பின் விக்னேஷ் சிவன் சமந்தாவிடம் கதையை கூறியுள்ளார் சமந்தாவிற்கு கதை பிடித்துப்போக சில யோசனைகளுக்கு பிறகு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். அப்படி உருவானது தான் காத்துவாக்குல 2 காதல் இந்த படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரம் நயன்தாராவும் கதீஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியை கண்மணியும் கதீஜாவும் மாறி மாறி காதலிக்கிறார்கள் கடைசியில் விஜய் சேதுபதி என்ன செய்கிறார் யாரை ஏற்று கொள்கிறார் என்பதே மீதி கதை விக்னேஷ் சிவன் பாணியில் கலகலப்பாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி இது பற்றி ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் அப்போது விக்னேஷ் சிவன் அவர்களைப் பற்றி கேட்ட கேள்விக்கு அவனுக்கும் எனக்கும் நிறைய சண்டைகள் வரும் அப்புறம் ஒன்னு சேர்ந்துருவோம்.
முதலில் நானும் ரவுடிதான் கதையை விக்கி என்னிடம் சொல்லும் போது நான் தூங்கிட்டேன் விக்னேஷ் சிவன் மீது உள்ள நம்பிக்கையால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ஆனால் அந்த படத்தை ஜாலியாக எடுத்துச் சென்று ஹிட் படமாக கொண்டு சென்றார் விக்கி.