Thursday, May 2, 2024
-- Advertisement--

விஜய் சேதுபதி ரசிகருக்காக செய்த செயல் ..!!!முன்னுதாரனம்னா இப்படித்தானே இருக்கணும்..!!

முன்னணி நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை மாற்றி அமைத்த நடிகர் விஜய் சேதுபதி .

தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என செய்யும் தொழிலை விட்டுவிட்டு குடும்பத்தை விட்டு விட்டு சினிமாவை மட்டுமே நம்பி வந்தஒருவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நண்பருக்கு நண்பராக வந்தவர் அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்ததால் தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் நடிகராக மாறினார்.

அடுத்தடுத்து இவர் நடித்த பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் முன்னணி நடிகராக உயர்ந்தார். முன்னணி நடிகராக உயர்ந்தாலும் தன் இயல்பை மாற்றாமல் இருப்பதால் விஜய் சேதுபதிக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அதே போல் ஒருவர் முன்னணி நடிகராக மாறிவிட்ட ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் ரஜினி, விஜய் போன்ற உயர் நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரம் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது மேலும் ஒரு படி ஏறி பாலிவுட், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த மைக்கேல் படம் கடந்து வாரம் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி கடந்த வருடம் மட்டும் நான்கு படங்கள் மேல் நடித்துள்ளார்.

இவ்வளவு பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு போதும் தன் ரசிகர்களை மறந்ததில்லை. அவர்களை ஊக்குவிக்க தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையை ஈடுபடுவார். அதுபோல தன் ரசிகர் திருமணத்தில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் என்ன பாராட்டத்தக்க விஷயம் என்றால் அந்த திருமணம் சமத்துவ திருமணமாக நடந்தது அதனால் ரசிகர்கள் இதனை பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles