தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் ஒரே நடிகர். இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது என்றே சொல்லலாம் இவருடைய படங்களின் பிசினஸ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பலம் உள்ளது. இதுபோல சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு மட்டும் இருப்பார்கள் தற்பொழுது விஜய்க்கு அமைந்தது அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு.
என்னதான் ஒரு இயக்குனரின் மகனாக இருந்து திரையுலகிற்கு அறிமுகம் ஆனாலும் விஜய் பார்க்காத அவமானங்கள் இல்லை விஜய் சந்திக்காத பிரச்சினைகளும் இல்லை. அதனை தாண்டி இன்று அவருடைய கடின முயற்சியினாலும் உழைப்பினால் மட்டுமே தற்பொழுது தமிழ் சினிமாவில் தளபதியாக வந்து நிற்கிறார்.
யூட்யூபில் பிரபலமான மதன் கௌரி வெளிநாட்டிற்கு சென்று உள்ளார் அப்பொழுது அவர் பயணித்த காரை ஓட்டிய ஓட்டுநர் நேபாளத்தை சேர்ந்தவர் அவர் எனக்கு சூப்பர் ஸ்டார் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று கூறி உள்ளார் . இதனை மதன் கௌரி வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.