Sunday, May 19, 2024
-- Advertisement--

கும்பகோணத்தில் அஜித்திற்காக விஜய் ரசிகர்கள் செய்த செயல்..!!! நெகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!!! இந்த ஒற்றுமை வேற லெவல் போங்க.

வலிமை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம். வலிமை நாளை வெளிவர உள்ளதால் இன்றைய ரசிகர்கள் தியேட்டரில் முன் குவிந்து தங்களின் FAVOURITE STAR அஜித்தை கொண்டாடி வருகிறார்கள் பல தியேட்டர்களில் இன்று அஜித் படத்தின் பாடல்களை போட்டு ரசிகர்களை ஆட்டம் போட வைத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

வலிமை படத்தை இன்றே கொண்டாட தயார் ஆக உள்ள அஜித் ரசிகர்கள் தியேட்டரை அலங்காரம் செய்யும் வேலைகளும் பிளக்ஸ் போர்டுகள் கட்அவுட் வைக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

அர்ஜுன் போலீஸ் ஆபீஸராக நடிக்கும் அஜித் SATAN ‘s SLAVES என்ற கும்பலை எப்படி குறிவைத்து அழிக்கிறார் என்பதை படத்தின் ஒரு வரிக்கதை அதில் ஏகப்பட்ட SURPRISE ELEMENTS இயக்குனர் HVINOTH வைத்துள்ளதாக தகவல்கள்.

இப்போதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்க அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்யின் ரசிகர்கள் அஜித்தின் வலிமை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று பிளக்ஸ் வைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் கும்பகோணத்தில் விஜய் ரசிகர்கள் வைத்த பிளக்ஸ் அனைவரின் கவனத்தை திருப்பியுள்ளது. சமூக வலைத்தளத்தில் விஜய்யா அஜீத்தா என்று அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது விஜய் ரசிகர்களும், விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்களும் இதுபோன்ற ஒற்றுமையாக இருப்பது பெரிய ஆச்சர்யம்.

இது போன்று இரு தரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக நல்ல படங்களை வரவேற்பது ஆரோக்கியமான விஷயம். தற்பொழுது கும்பகோணம் கன்னியாகுமரி என்று விஜய் ரசிகர்கள் அஜித்தின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வரும் பிளக்ஸ் புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles