Wednesday, November 13, 2024
-- Advertisement--

இவர் சொல்றத கேட்டு நமக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே அவருக்கு எவ்வளவு வலிக்கும்..!!!விஜய் ஆண்டனிக்காக உருகும் ரசிகர்கள்.

நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள். அவரோட மகள் மீரா கடந்த 19ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஜய் ஆண்டனி அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி அவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் இருக்கும் வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள்.

விஜய் ஆண்டனி அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகளின் பெயர் மீரா இளைய மகளின் பெயர் லாரா. மூத்த மகள் மீரா அவர்கள் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இதில் மீரா அவர்கள் 19ஆம் தேதி அன்று அதிகாலையில் திடீரென்று அவரது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அடுத்து மீரா அவர்களின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த துயர சம்பவம் திரையுலக நட்சத்திரம் அனைவரையும் மட்டுமல்லாது பொதுமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீராவின் இறுதி அஞ்சலிக்கு திரைப்படக் கலைஞர்கள் பலரும் வந்தனர் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைப் பற்றி போலீசார் விசாரணை செய்கையில் மீரா அவர்கள் அனைவரையும் மிஸ் செய்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும் விஜய் ஆண்டனி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள் மற்றும் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகத்தை விட ஜாதி,மதம்,பணம்,பொறாமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறார்.என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்”, என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார் விஜய் ஆண்டனி அவர்கள்.

இந்த அறிக்கையை படிக்கும் போதே நம்மை அறியாமல் நமக்கே கண் கலங்குகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles