Saturday, May 4, 2024
-- Advertisement--

இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் விஜய் அண்டனி…!!!

பிச்சைக்காரன் 2 படம் வாயிலாக நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனராகவும் மாறியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் 2016 இல் வெளியானது. சசி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

விஜய் ஆண்டனியின் புகழையும் உயர்த்தியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட கால கனவு நனவாகிறது. என் மனதில் இயக்குனராகும் ஆசை இருந்தது.

ஒரு நடிகராக ஒவ்வொரு படத்திலும் நான் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளேன். பல்வேறு திரைப்பட இயக்குனர்களிடம் இருந்து பல நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் பணிபுரியும் துறை பற்றி விழிப்புணர்வு இருப்பது, நன்மை தரும்.

இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் இத்துறையில் சிறந்த வெற்றியை பெற்று இருப்பது என் அதிர்ஷ்டம் என் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் திரைப்பயணத்தில் என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles