Saturday, May 4, 2024
-- Advertisement--

திரையுலகினரின் வாழ்த்து மழையில் நனையும் விக்னேஷ் சிவன்…!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் நடித்த அஜித் குமார். சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

தற்போது அஜித்தின் 61வது படத்திலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசை அமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நடிகர் அஜித் ஒரு படத்துக்கும் அடுத்த படத்திற்கும் இடையே அதிக இடைவெளி எடுத்துக் கொள்வார். ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் இப்போது அஜித்தின் 61வது படம் தொடங்குவதற்கு முன்பே தனது அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

நடிகர் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் நேற்று வெளியான தகவலின் படி அஜித்தின் 62வது படத்தை லைகா புரோடக்சன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது. இந்த அடுத்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் படம் திரைக்கு வருகிறது.

அஜித் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, நெல்சன், பிரசன்னா, கலையரசன், எஸ். ஜே. சூர்யா உள்ளிடோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles