Wednesday, May 8, 2024
-- Advertisement--

சாமி வருது.. சாமி வருது வழிய விடுங்கடா… திருமாவளவன் கால் வெள்ளத்தில் படாமல் இருக்க தொண்டர்கள் செய்த அதகள ஏற்பாடு..!!!

திருமாவளவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பியபோது வெள்ளநீர் சூழ்ந்ததால் கால் நனையாமல் இருக்க அங்கிருந்தவர்கள் ஒரு அதகள ஏற்பாட்டை செய்தனர். வெள்ள நீரில் கால் நனையாமல் இருக்க வீட்டிலிருந்து காருக்கு செல்ல முடியாததால் பார்வையாளர் அமரும் இரும்பு நாற்காலி மீது திருமாவளவன் ஏறிய பின் தொண்டர்கள் நாற்காலியை இழுத்து சென்று கார் நிற்கும் இடத்திற்கு அழைத்து சென்று காரில் திருமாவளவனை ஏற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வன்னிஅரசு கொடுத்துள்ள விளக்கம், சென்னையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக இருக்கிறது. தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் மக்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். அதோடு மழை விட்டுவிட்டு பெய்வதால் தண்ணீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீட்டிற்கு முன் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. அதனால் வெளியே செல்ல கிளம்பிய திருமாவளவன் வெள்ள நீரில் கால் நினையாமல் இருக்க அங்குள்ள தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இரும்பு நாற்காலியை வரிசையாக அமைத்து ஒவ்வொன்றாக அடுக்கி அவருக்கு பாதை அமைத்து தந்தனர்.

அப்போது அந்த நாற்காலி மீது ஏறி சிறிது தூரம் வந்தபின் அங்கிருந்தவர்கள் வெள்ளத்தில் இறங்கி நாற்காலியை இழுத்து வாசல் வரும் வரை ஒவ்வொரு முறையும் நாற்காலியை போட்டு கார் கதவு வரும்வரை நாற்காலியை பயன்படுத்தி அழைத்து வந்து பின் கார் கதவு வந்தவுடன் நேரடியாக காருக்குள் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் வெள்ளத்திலிருந்து பார்வை இடுகையில் வெள்ளத்தில் கால் வைக்காமல் திருமாவளவன் செய்த செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னிஅரசு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டதில் வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஒரு அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்தது அப்படித்தான் இந்த ஆண்டும் ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஹோட்டல் கூட தங்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகள் ஓடவே தங்குகிறார். முழங்காலளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளைப் போட்டு உதவுகிறார்கள். தம்பிகள் இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles