கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசன் மூலம் கம் பேக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். அந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக இருந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வனிதாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தன.

அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்காமல் போனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பீட்டர் பால் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறி அவரை துரத்தி விட்டார் வனிதா.

இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது கேஎப்சியில் சிக்கன் சாப்பிட போய் அப்சட்டில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் விமான நிலையத்தில் கே எஃப் சி சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

கஸ்டமர் சர்வீஸ் படுமோசமாக இருக்கிறது என பதிவில் குறிப்பிட்டுள்ளார். வனிதா தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சிறியதாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். அதோடு பீஸ் மிகவும் சிறியதாக இருந்ததாகவும் இது சிக்கன் பிசா இல்ல காக்காவா என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அந்த சிக்கன் புகைப்படத்தோடு தனது சமூக வலைதள பக்கத்தில் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதற்கு வருத்தம் அளிக்கும் விதத்தில் கேஎப்சியும் நடிகை வனிதாவிற்கு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
