Monday, May 20, 2024
-- Advertisement--

பவர் ஸ்டார் மிஞ்சும் அளவிற்கு தனது பெயருக்கு முன்பு பட்ட பெயர் சூட்டி கொண்ட வனிதா விஜயகுமார்…!!!

பிக்கப் படக்குழு வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார் என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுத்தார். இதைக் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில தினங்களிலேயே பிரிந்தார். வனிதா பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக நடனம் ஆடினார். பிறகு அந்த நிகழ்ச்சியிலும் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிபி ஜோடிகளில் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் செய்து வெளியேறி இருந்தார்.

மேலும் அதேபோல் வனிதா விஜயகுமார் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது இறுதியில் அது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் கொடுத்திருந்தார்.

இன்று வனிதா விஜயகுமார் தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவர் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிக்கப் திரைப்படத்தின் குழு சார்பாக வைரல் ஸ்டார் விஜயகுமார் என போஸ்டர் ரெடி செய்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வைரல் ஸ்டார் என்ற பட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles