Friday, May 17, 2024
-- Advertisement--

பிரியாணி செய்து சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா விஜயகுமார்…!!! நீங்களெல்லாம் இந்துவா..? என வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்.. கூலாக தக்கபதிலடி அளித்த வனிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றார். சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பிரபலமாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் தனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார். மேலும் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் கடந்த சில மாதங்களாக யூடியூபில் வீடியோ எதுவும் பதிவிடாமல் இருந்து வந்தார். வனிதா தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று ஒரு சமையல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வனிதா வெளியிட்ட வீடியோ தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பீப் பிரியாணி செய்துள்ளார்.

இந்த வீடியோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் சிலர் வீடியோ நன்றாக இருப்பதாக பாராட்டினாலும், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நீங்க எல்லாம் ஹிந்துவா..? கருமம் நீங்க வெளியிட்ட திலேயே இதுதான் மோசமான வீடியோ என்றெல்லாம் கமெண்ட் செய்து திட்டி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கூலாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் மக்களே என்ன ஆச்சு உங்களுக்கு, என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதில் இருந்தே அமெரிக்காவில் வாழ்ந்தவள். இதனால் சிறு வயதில் இருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கேன்.

நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்கக் கூடாது இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் கூறியதுபோல் உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறியையோ வைத்து இதுபோன்ற பிரியாணியை சமைத்து சந்தோஷமா சாப்பிடுங்க என்று வனிதா கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles