வனிதா விஜயகுமார் இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மற்றும் நடிகை மஞ்சுளா அவர்களின் மகள். வனிதா முதல் முதலில் தமிழில் தளபதி விஜயின் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தளபதி விஜயுடன் இன்று ஜோடி சேர்ந்து நடிக்க தவம் கிடக்கும் நடிகைகள் மத்தியில் வனிதா 1995-ல் ஜோடியாக நடித்தது பெரிய விஷயம்தான். அதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் அவர்களின் நடிப்பில் வெளியான மாணிக்கம் என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன் மூலம் மறுபடியும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை வெளிப்படையாக மற்றும் தைரியமாக கூறுவார். இதனால் ஒரு சில போட்டியாளருக்கு வனிதாவை பிடிக்காமல் போனது அதுமட்டுமில்லாமல் தனது கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர்களிடம் சண்டை போடும் அளவிற்கு சென்று விடுவார் வனிதா.
ஏகப்பட்ட சண்டைகள் வனிதாவால் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தது அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கே தெரியும். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து குழந்தை பெற்று விவாகரத்து வாங்கிய வனிதா தற்போது மூன்றாவதாக இன்று பீட்டர் பால் என்ற இயக்குனரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.