Monday, May 6, 2024
-- Advertisement--

கொல்கத்தா காளியாக அவதாரம் எடுத்த வனிதா விஜயகுமார்…!!! அட கொடுமையே…!!!

வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளத்தில் காளி கெட்டப்பில் செம டெரரான புகைப்படத்தினை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் பீட்டர் பால் உடனான திருமண விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார். அதனுடன் யூடியூப் சேனல், பட வாய்ப்பு என படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிவரை போராடி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். தற்போது அனல் காற்று, 2k அழகானது காதல், அந்தகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து வனிதா ஜோடியாக நடனமாடி வருகிறார். இருவருடைய காமினேஷன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அடுத்த எபிசோடில் வனிதா காளி வேடம் அணிந்து நடனமாடுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் காளி கெட்டப்பில் செல்பி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொல்கத்தா காளி அவர்களுடைய கோபம் தீமைகளை அழிக்கும் கர்மா தொடங்குகிறது என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles