Friday, May 17, 2024
-- Advertisement--

மகான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம் வாணிபோஜன் நெருக்கமான காட்சிகள்…!!! அதிருப்தியில் வாணிபோஜன்…!!! இயக்குனர் கூறிய விளக்கம்.

சியான் விக்ரமின் மகான் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் சேர்ந்து நடிக்கும் படம் என்பதினல் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது.

மகான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஆகா ஓகோ என்று இல்லை அதே நேரத்தில் படம் நன்றாக இல்லை என்றும் கூற முடியாத அளவிற்கு ஓகேவான படமாக அமைந்தது குறிப்பாக விக்ரம் துருவ் மற்றும் பாபி சிம்மா அவர்ரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தனர்.

காந்தியின் மீது அலாதி பிரியம் கொண்ட விக்ரமின் தந்தை நரேன் விக்ரமுக்கு காந்திமகான் என்ற பெயரை வைக்கிறார். காந்திமகான் என்ற பெயருக்கு ஏற்ப விக்ரமும் தனது மனைவி சிம்ரனுடன் வாழ்ந்து வருகிறார். விக்ரமிற்கு இந்தப் பெயரினால் தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே தன் மனம் நினைத்தபடி வாழ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து வரும் நேரத்தில் சிம்ரன் ஒரு நாள் வெளியூர் சென்றிருக்க தன் இஷ்டப்படி மனம் போன போக்கில் வாழ்கிறார் விக்ரம். தண்ணி அடித்துக்கொண்டு சீட்டு ஆடிக்கொண்டு ஜாலியாக அந்த நாளளை கொண்டாடுகிறார். இந்த விஷயம் சிம்ரனுக்கு தெரியவர சிம்ரன் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருவார். விக்ரம் SOORA என்ற மதுபான கடையை தொடங்கி பெரிய அளவில் வளர்ந்து வரும் போது விக்ரமின் கூட்டத்தை அழிக்க அவரது மகன் துருவ் போலீஸ் ஆபீஸராக வருகிறார் அதன் பின் நடக்கும் அப்பன் புள்ள ஆட்டம் தான் இந்த மகான்.

மகான் படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அவர் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை நகர்த்தும் விஷயத்தில் கொஞ்சம் வேகம் காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னிலையில் மகான் படத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்க தளபதி விஜய் நேற்று மகான் திரைப்படத்தை பார்த்துவிட்டு படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பிரபலங்கள் பாராட்டி வரும் இந்நிலையில் பிரபல நடிகை வாணி போஜன் படக்குழுவினர் மீது அப்செட்டில் இருக்கிறார் காரணம் மகான் படத்தில் தான் நடித்த காட்சிகளை மொத்தமாக படக்குழுவினர் நீக்கி விட்டனர் என்ற வருத்தத்தில் உள்ளாராம். சீயான் விக்ரமுடன் ஜோடியாக சில காட்சிகள் நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் சில காட்சிகள் நெருக்கமாகவும் நடித்துள்ளார் ஆனால் மகான் படத்தில் அவர் நடித்த எந்த ஒரு காட்சியும் இல்லாததால் படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாணி போஜன் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருக்கிறாராம்.

படத்தில் ஒரு காட்சி கூட இல்லை ஆனால் படத்தின் முடிவின் போது மங்கலம் என்ற கதாபாத்திரத்தில் வாணிபூஜன் நடித்து இருப்பதாக அறிவித்திருந்தார்கள் படக்குழுவினர்.

வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளது சிம்ரனை பிரிந்து வாழும் விக்ரம் வாணி போஜன் உடன் தொடர்பில் இருப்பதாக கதையில் அமைக்கப்பட்டிருந்தது. வாணிபூஜன் விக்ரம் தொடர்பான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது ஆனால் வாணி போஜன் தொடர்பான மொத்த காட்சிகளையும் எடுத்து முடிக்க பெரிய கூட்டம் தேவைப்பட்டதால் எடுக்க முயன்றபோது கொரோனா இரண்டாம் அலை குறுக்கிட்டது கட்டுப்பாடுகளால் வாணி போஜன் நடித்த காட்சிகளை எடுத்து முடிக்க முடியாமல் போனது இதனால் வேறு வழியில்லாமல்தான் வாணி போஜன் மொத்த காட்சிகளையும் நீக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles