Tuesday, May 21, 2024
-- Advertisement--

சிவப்பு நிற புடவையில் அழகில் வசீகரிக்கும் வாணிபோஜன்..!!!

நடிகை வாணி போஜன் இவரை குட்டி நயன்தாரா என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் செல்லமாக அழைக்கிறார்கள். வாணி போஜன் இப்பொழுது நடிகர் பரத்துடன் புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

அசோக் செல்வன் உடன் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த வாணி போஜன் அந்த படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அதற்கு முன் தமிழில் ஒரு இரவு, அதிகாரம் 79 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் வாணி போஜன் ஓ மை கடவுளே ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியலில் நடித்து வந்த வாணி போஜன் அதன்பின் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வந்தார் அதனை தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யபிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சீரியலில் நடிக்கும்போது வாணி போஜனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள் தற்பொழுது வாணி தமிழ் படங்களிலும் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் அடுத்தடுத்து படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் வாணி போஜன் சிவப்பு நிற சேலையில் சொக்க வைக்கும் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles