Sunday, May 19, 2024
-- Advertisement--

வலிமை விமர்சனம் | Valimai AjithKumar Movie Review

இரண்டு வருட கடும் உழைப்பிற்குப் பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. H வினோத் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வலிமை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

கதை:

சென்னையில் நகை பறிப்பு, கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது SATAN SLAVES என்ற கும்பல். டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் SATAN SLAVES கும்பலின் தலைவன் கார்த்திகேயா எங்கேயோ இருந்துகொண்டு இளைஞர்களை குறிப்பாக பைக் ரேஸர்களை SATAN SLAVES இணைத்துக்கொண்டு கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அஜித்திடம் பொறுப்பை கொடுக்கிறார்கள். கடைசியில் அஜித் அந்த கும்பலை எப்படி பிடிக்கிறார். சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

முதல் பாதி:

அஜித் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வலிமை படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் மட்டும் சேசிங் காட்சிகளில் தனது உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். குறிப்பாக இடைவேளை நெருங்கும் முன் வரும் சேசிங் காட்சிகளில் தியேட்டரை அதகளப்படுத்துகிறார். முதல் பாதியை பொருத்தவரை H வினோத் கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் தான் சொல்ல வந்த கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். முதல் பாதி பார்த்தவர்கள் இந்தப் படம் அஜித்தின் கேரியரில் பெரிய வெற்றி படமாக அமையும் என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. முதல் பத்தி சிறப்பாக எடுத்து இருந்ததற்கு H வினோத் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இரண்டாம் பாதி:

இடைவேளை முடிந்து 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக செல்லும் கதை அதன் பின் எங்கெங்கோ செல்கிறது இதற்கிடையில் சென்டிமெணட் காட்சிகளை கஷ்டப்பட்டு அஜித்திற்காக திணித்தது போல இருந்தது. சுத்தமாக சென்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாததால் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் பெரும் சலிப்பை ஏற்படுத்தியது. அஜித்தை வைத்து பைக் சேசிங் காட்சிகள் நிறைய செய்தால் அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று இயக்குனர் நினைத்தாரா என்று தெரியவில்லை கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் மறுபடியும் பைக் சேசிங் காட்சிகள் தொடர்ந்து சேசிங் காட்சிகளை பார்த்தால் போதும் பா உங்க சேசிங்னு சொல்லும் அளவிற்கு அலுத்துப்போனது. படத்தின் திரைக்கதை இரண்டாம் பாதியில் திசை மாறியது போல இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காட்சி அமைப்பில் செலுத்திய கவனத்தை இரண்டாம் பாதியில் திரைக்கதையில் செலுத்தியிருக்கலாம் இயக்குனர்.

ப்ளஸ்

ONE AND ONLY அஜித்

இடைவேளைக்கு முன் இடைவெளிக்குப் பின் வரும் சேசிங் காட்சிகள்.

அருமையான ஒளிப்பதிவு.

படத்திற்காக உழைத்த அதனை ஸ்டண்ட் கலைஞர்கள். உயிரை பனையவைத்து நடித்து இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கான சொல்ல வந்த மெசேஜ்.

மைனஸ்

பின்னணி இசை சில இடங்களை தவிர பெரிதாக ரசிக்கும்படி இல்லாதது.

முதல் பாதியில் இருந்த விறு விறுப்பு இரண்டாம் பாதி சுத்தமாக இல்லாமல் போனது.

பல இடங்களில் வாடிய முகத்துடன் அஜித்தை பார்க்கையில் கஷ்டமாக இருந்தது.

வேண்டுகோள் : அஜித் சார் தயவு செய்து ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக இருந்தால் தான் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள். ரிஸ்க் காட்சிகளில் நடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். எப்போதும் உங்களை கொண்டாட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் வலிமையின் திரைக்கதை முதல் பாதி போல இரண்டாம் பாதியும் வலிமையாக இருந்து இருந்தால் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அஜித்திற்கு அமைந்து இருக்கும். ஆனால்?

ரேட்டிங்: 2 .75 / 5

Verdict : Average

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles