Sunday, May 19, 2024
-- Advertisement--

வலிமை படத்தில் இருந்து 14 நிமிட காட்சிகளை தூக்கியது படக்குழு…!!! நாளை முதல் திரையரங்கில் ரசிகர்கள் பார்க்கலாம் வெளிவந்த தகவல்.

H வினோத் இயக்கத்தில் போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் தல அஜித்தின் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது வலிமை. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை பார்க்கப் போகிறோம் அது மட்டுமல்லாமல் இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் இயக்கியுள்ளார் படம் தாறுமாறாக இருக்கப்போகிறது என்று பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.

உண்மையிலே முதல் பாதி அனைவரும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெறித்தனமாக இருந்தது அஜித்தின் பெரிய ஹிட் படங்களில் கண்டிப்பாக வலிமை இடம்பெறும் என்று அனைவரும் எண்ணி வந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாதி அப்படியே உல்டாவாக அமைந்தது இண்டர்வெல் முடிந்து முதல் 30 நிமிடங்கள் தவிர படம் படம் சுவாரசியமாக இல்லாமல் போனது.

அஜித்திற்காக காட்சிகளோடு சென்டிமெண்ட் காட்சிகளை H வினோத் தினித்தாரா அல்லது சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லவில்லையா என்று ரசிகர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

உயிரை பணையம் வைத்து அஜித் நடித்திருக்கும் காட்சிகளைப் பார்க்கையில் அஜித் மீது ஒரு பெரிய மரியாதை வருகிறது அந்த அளவிற்கு மனிதன் தன்னை படத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.

படக்குழுவினருக்கு நெருக்கமான பலர் படத்தில் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதை படக்குழுவினர் காதுக்கு கொண்டு செல்ல தற்பொழுது வலிமை படக்குழுவினர் 14 நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள். நாளை முதல் 14 நிமிட காட்சிகள் நீக்கி வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

ஒரு வேலை 14 நிமிடங்களை படத்திலிருந்து சில வேண்டாத காட்சிகளை தூக்கினால் வலிமை ஓரளவிற்கு வலிமை பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles