Thursday, May 2, 2024
-- Advertisement--

யோகிபாபு ஹீரோ ஓவியா ஹீரோயின் படத்தின் பெயர் என்ன தெரியுமா…!!! வடிவேலின் பிரபலமான கதாபாத்திரம் தான்.

வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நேரத்தில் வடிவேலு அவர்களின் கதாபாத்திரத்தை படங்களுக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் காமெடி நடிகர் சதீஷ் அவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் பெயர் தான் நாய் சேகர் இந்த நாய் சேகர் என்ற பெயர் தலைநகரம் படத்தில் வடிவேலு அவர்களின் பிரபலமான கதாபாத்திரம்.

அதுபோல பிரபல VJ ரியோ ராஜ் நடித்து இன்று திரைக்கு வர இருக்கும் படம் தான் பிளான் பண்ணி பண்ணனும் இந்தப் படத்தலைப்பு வடிவேலு அவர்கள் போக்கிரி படத்தில் சொன்ன பிரபலமான டயலாக்.

தற்போது தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. யோகிபாபாவுவின் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

கான்ட்ராக்டர் நேசமணி என்பது FRIENDS படத்தில் வடிவேலு அவர்களின் கதாபாத்திரம் . யோகி பாபுவிற்கு ஜோடியாக இந்த படத்தில் ஓவியா நடிக்கிறார்.

யோகி பாபுவிற்கு ஜோடியாக ஓவியாவா தலைவா நீங்க வேற லெவல் என்று கலாய்த்து வருகிறார்கள் யோகிபாபு ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles