Friday, May 3, 2024
-- Advertisement--

அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த உதயநிதி..!!! தந்தையே மிஞ்சிடுவார் போலயே மக்கள் பாராட்டு…!!!

உதயநிதி ஸ்டாலின் தன் தாத்தா கலைஞர் கருணாநிதி அவர்களின் தொகுதியான சேப்பாக்கத்தில் வேட்பாளராக நின்று எக்கச்சக்க ஓட்டுகளை பெற்று பெரும் மக்கள் ஆதரவுடன் எம்எல்ஏ ஆனவர்.

மனிதர் ஜெயித்த நாளிலிருந்து இன்றுவரை வீட்டுக்கு கூட சரியாக செல்கிறாரா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு தனக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தினமும் தனது தொகுதிக்கு சென்று தொகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதற்கு விரைவாக தீர்வும் கொடுத்து வருகிறார். சேப்பாக்கத்தில் ஒரு பொது கழிவறையை பார்த்த உதயநிதி இப்படி மோசமாக இருக்கிறது எப்படி மக்கள் உபயோகிப்பார்கள் இதனை உடனே சரி செய்யுங்கள் என்று உத்தரவிட்டு தற்போது அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

அதுபோல அந்த தொகுதியில் மிகவும் மோசமான நிலையில் வசிக்கும் இடத்தில் அருகிலிருந்த குப்பைகளை அள்ளி அந்த தொகுதியை சுத்தப்படுத்தி வருகிறார்.

ஏராளமான பிரச்சினைகளுக்கு அந்த தொகுதி மக்களுக்கு தீர்வு கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவல்லிக்கேணியில் அமைந்திருந்த அம்மா உணவகத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு தயாரிக்கப்படும் சாப்பாட்டை அவரே சாப்பிட்டு பார்த்தது மட்டுமல்லாமல் உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தினசரி வருவாய் சமையல் பொருட்களின் இருப்பு போன்றவற்றை ஆய்வு செய்த உதயநிதி அம்மா உணவகத்தில் இன்னும் தரமாக உணவை தருவதற்காக முயற்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்காக இப்படி களத்தில் இறங்கி பாடுபடுவதை பார்த்த மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles