ஊரடங்கு காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் ஒரு சில தொழிலாளர்கள் தொடர்ந்து தன் வேலைகளை செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் மட்டுமே வேலையை தொடர்ந்து செய்கின்றன. இந்நிலையில் உபர் நிறுவனமும் ஊரடங்கிளும் அதன் வேலையை செய்து வருகிறது .
இந்நிலையில் உபர் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவர் ரூபின் சாவ்லேவ் வெளியிட்ட அறிக்கையில் டெய்லி மெயில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 3700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
உங்களின் பணி மிகச் சிறப்பாக இருந்தாலும் இன்று உங்களது கடைசி பனி நாள் என ரூபின் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக அவர் வீடியோ அழைப்பு செய்த பொழுது மூன்று நிமிஷம் ஒவ்வொருவரிடமும் உரை நிகழ்த்தி அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றும் பொழுது ஒரு கட்டத்தில் உணர்ச்சி பொங்கி கட்டு படுத்த முடியாமல் அழுதுள்ளார்.
பணி இழக்கும் ஊழியர்களுக்கும் இது மிகவும் அதிர்ச்சியான அறிவிப்பாக இருந்தது மட்டுமின்றி பலர் இதனை எதிர்த்துள்ளனர். பணி இழந்த ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்று தெளிவாக தெரியவில்லை. பல பொருளாதார நெருக்கடியில் இந்த வேலை இழப்பு பெரும் அதிர்ச்சியை ஊழியர்களிடையே ஏற்படுத்திஉள்ளது.