Saturday, May 4, 2024
-- Advertisement--

ஆச்சு அசல் த்ரிஷாவை போலவே இளம் வயதில் இருந்த த்ரிஷாவின் அம்மா…!!! புகைப்படம் வெளியிட்டு அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய திரிஷா…!!!

பிரபல நடிகை திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களின் ஜோடி என்ற படத்தில் சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்து வெளியான மௌனம் பேசியதே, லேசா லேசா போன்ற திரைப்படங்கள் வெளியானது ரசிகர்களிடம் முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்ற திரிஷா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் தெலுங்கு சினிமாவில் பெரிய மார்க்கெட்டை வைத்து இருந்த திரிஷா 23 வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக அசைக்க முடியாத இடத்தில நிற்கிறார். திரிஷா தற்பொழுது உலகமே பெரிதாக எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வந்து கொண்டு உள்ளது.

திரிஷா வளர்ச்சிக்கு அவருடைய தாயாரும் முக்கிய காரணம் ஆரம்பத்தில் திரிஷா நடிக்கும் படங்களின் கதையை தேர்ந்தெடுப்பதிலும் சரி, சூட்டிங் செல்லும்போது பாதுகாப்பிற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வதிலும் சரி அவருடைய தாய் திரிஷா மீது பெரிய அக்கறையை வைத்து வந்தார்.

த்ரிஷாவின் வளர்ச்சிக்கு அவருடைய தாய்க்கும் பெரிய பங்கு உண்டு இன்று தனது தாய் உமா கிருஷ்ணன் பிறந்தநாள் என்பதினால் தனது அன்பு அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமூக ஊடகங்கள் மூலமாக கூறியிருக்கிறார்.

அதில் HAPPY BIRTHDAY MY EVERYTHING என்று பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் திரிஷா குட்டி பாப்பாவாகும் அவருடைய அம்மா இளம் வயதில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்ட்டா ரசிகர்கள் ஆச்சு அசல் த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்தது போல அவருடைய அம்மா இளம் வயதில் இருந்துருக்காங்க என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles