Saturday, May 18, 2024
-- Advertisement--

10 வருடத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் நடித்த த்ரிஷா ..!!! அதுவும் மெடிக்கல் காலேஜ் ஸ்டுடென்ட்டா. செம கியூட் வீடியோ.

திரிஷா தமிழில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் இன்றும் தனது இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகை. தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தில் 1999 ஆம் ஆண்டு சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

அதன்பின் சூர்யாவின் மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் நடித்து வந்த திரிஷா கில்லி என்ற படத்தில் நடித்த பின் கமர்சியல் ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்றார்.

அதுவரை காதல் படங்களில் மட்டும் நடித்து வந்த திரிஷா கில்லிக்கு பிறகு கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். த்ரிஷாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஏராளம். தொடர்ந்து சினிமாவில் கமர்சியல் படங்களில் நடித்து வந்த திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்தப் படம் அவருக்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதன்பின்னும் வெற்றி நாயகியாக வலம் வந்த திரிஷா 96 என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. தற்பொழுது த்ரிஷா சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக நடித்துள்ளார் அதுபோல பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருக்கிறார்.

trisha 96

த்ரிஷாபல வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுடன் நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் திரிஷா மெடிக்கல் காலேஜ் ஸ்டுடென்ட்டாக நடித்து இருந்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles