Sunday, May 19, 2024
-- Advertisement--

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நல குறைவால் மருத்துவமனையில் காலமானார்!!!விபரம் உள்ளே…

சமூக சேவகர் டிராபிக் ராமசாமி என்பவர் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87 . அவர் இந்தியாவிலேயே பொது நல சேவை ஆற்றுவதில் மிகவும் பிரபலமானவர். அவர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டால் உடனடியாக சென்று சீர் செய்வது அவருக்கு வழக்கம். அதனாலேயே அவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.
அவர் சமூக நலனுக்காக பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இவரே வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி நிறைய வழக்குகளை வெற்றி பெற்றுள்ளார். இவரே அதிக எடை ஏற்றி செல்லும் மீன்பாடி வண்டிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். இவர் தமிழகத்தில் கட்டிடங்கள் கட்டும் பொழுது வாகன நிறுத்தம் கொண்ட வசதியுடன் கட்டவேண்டும் என்று நீதிமன்ற ஆணையையும் பிறப்பித்துள்ளார். இதுவே தற்போது தமிழகத்தில் முழுவதும் பரவலாக அமல்படுத்தியுள்ளது.


இவர் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இவர் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வதால் இவர் மீது எதிர்தரப்பினர் மிகவும் கோபப்பட்டு பல முறை தாக்கி உள்ளனர். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் தன் கடமையை இன்றுவரை நிறைவேற்றியுள்ளார். இந்த சூழலில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 4 ஆம் தேதி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்களும் வலைத்தள வாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles