Wednesday, May 8, 2024
-- Advertisement--

பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்…!!! பிரியாணி பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.

சென்னையில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என அறிவித்துள்ளது. ஆம்பூர் பிரியாணி ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என ஆஃபர்களை அறிவித்துள்ளது. சென்னையில் மழை வெளுத்து வாங்குவதால் அன்றாட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

அதில் குறிப்பாக தக்காளியின் விலை தங்கம் விலை போல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது கூகிளில் ஹாட் டாப்பிக்காக தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என பல இல்லத்தரசிகள் கூகுளில் சர்ச் செய்து வருகின்றனர். கூகுள் கீபோர்டு லிஸ்டில் தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என்பதே முதன்மையாக இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால் சென்னையில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் புதிய ஆஃபர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பிரியாணியை மார்க்கெட்டிங் செய்வதற்கான புதிய ஆஃபர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் சிறப்பம்சமாக 2 பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என அதிரடியான விளம்பரத்தை அறிவித்துள்ளனர்.

கடை உரிமையாளரின் இந்த அறிவிப்பு பிரியாணி பிரியர்களையும், நெட்டிசன்களையும் மிகவும் கவர்ந்துள்ளது. கடை உரிமையாளர் கூறியதாவது: தக்காளி உயர்வைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், தங்கம் போல் தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சாமானியர்கள், இல்லத்தரசிகள் தக்காளி விலையை கண்டு செய்வதறியாமல் திணறுகின்றனர். உடனடியாக அரசு தலையிட்டு விரைவில் விலை குறைய வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கூறியிருந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் தான் இந்த அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடை உரிமையாளர் அவரவர் வீடுகளில் மாடி தோட்டம் அமைத்து தங்களுக்கு தேவையானதை விளைவித்து கொள்வது அதியவசமாகிவிட்டது. தற்போது ஹோட்டல்களில் தக்காளி சட்னிக்கு பதிலாக கொத்தமல்லி சட்னி செய்து வருகின்றனர்.வீடுகளில் இல்லத்து அரசிகள் தக்காளி இல்லாமல் சமைத்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles