தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாகப் இருக்கிறது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய பாலச்சந்திரன் வெளியிட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அனல் கற்று வீசும். வெப்பச்சலனம் காரணாமாக ஒரு சில இடத்தில மலை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தில் இரண்டு நாட்கள் கடும் அனல் கற்று வீசும். இதனால் பொதுமக்கள் காலை 11 மணியில் இருந்து மலை 3 .30 மணி வரை வெயிலில் வெளியில் வரவேண்டாம் என்று அறிவித்து உள்ளார்.
இந்த நேரத்தில் வெயிலில் நடமாடுவது உடலுக்கு தான் கெடுதல் முடிந்த அளவிற்கு வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள். இந்த அக்னி வெயிலின் தாக்கம் வரும் 29 -ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.