தமிழக அரசின் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசியல் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாக மக்களிடையே குடும்ப தலைவிகளுக்கான ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில பெரும் வரவேற்பு இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான அறிவிப்பு வராமல் இருந்தது. இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்த பட்ஜெட் தாக்களில் கண்டிப்பாக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஆகையால் இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என அறிவித்தார். மிகவும் எதிர்பாக்கப்பட்ட குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனுடன் பல முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும்!#TNBudget2023 pic.twitter.com/BkWu8L1Noq
— DMK (@arivalayam) March 20, 2023