Sunday, May 19, 2024
-- Advertisement--

தாறுமாறாக லட்டு விலையை உயர்த்திய திருப்பதி தேவஸ்தானம்…!!! அதிர்ச்சியில் மக்கள்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மூலவருக்கு வைத்து பூஜை செய்யப்படும் நைவேத்ய பிரசாதங்களை விலையை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூஜைகள் செய்யப்படுகின்றது. அர்ஜித சேவைகள் உள்ளிட்ட பூஜைகளின்போது அப்பம், வடை, தோசை, முறுக்கு, லட்டு போன்ற 12 வகையான பிரசாதங்கள் முக்கியமாக வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த பிரசாதங்களை விலையை திடீரென உயர்த்தி உள்ளது. ரூபாய் 100 க்கு விற்கப்பட்ட முறுக்கு, ஜிலேபி 500 ஆகவும், ரூபாய் 25க்கு விற்கப்பட்ட சிறிய லட்டு 50 ரூபாய் ஆகும் 100க்கு விற்கப்பட்ட பெரிய லட்டு விலை 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை திருப்பாவாடை சேவை நடைபெறுகிறது.

அதில் மூலவருக்கு நைவேத்தியமாக வைத்து பூஜை செய்யப்படும் முறுக்கு, லட்டு, ஜிலேபி போன்றவை அதற்காக முன்பதிவு செய்யப்படும் விஐபிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அப்போது அந்த முறுக்கு, ஜிலேபி பிரசாதங்கள் விலை நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு விற்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும் கூடுதல் செயல் தலைவருமான தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles