இந்த வருட ஆரம்பத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விருந்தாக தல அஜித்தின் துணிவு படமும், தளபதி விஜயின் வாரிசு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது. பல வருடங்களுக்கு பிறகு இரண்டு மாபெரும் நடிகர்களின் படம் தற்போது தான் ரிலீஸ் ஆகிறது.

ரசிகர்களிடையே பல பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டு தற்பொழுது படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாரவாரம் எந்த படம் அதிக வசூல் பெற்றது என தற்போது போட்டி நிலவி வருகிறது.

இடையில் தல அஜித் ரசிகர் ஒருவர் பட வெளியீட்டின் பொழுது இறந்து போனது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தளபதி விஜயின் வாரிசு படமும் சீரியலை போல் உள்ளது. அதனால் ட்ரோல்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மூன்று வாரத்தை கடந்த வாரிசு படம் 280 கோடியும், அஜித்தின் துணிவு படம் 230 கோடியும் வசூலித்து உள்ளது.
