Friday, May 3, 2024
-- Advertisement--

முதல்வர் வருகைக்காக திருமணக்கோலத்தில் சாலையில் நின்ற மணமக்கள் காரை விட்டு இறங்கி திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர். திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முதலாக தனது தந்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த சொந்த ஊரான திருக்குவளைக்கு தனது குடும்பத்தோடு நேரில் சென்று இருந்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சொந்த ஊரான திருக்குவளையில் இன்னும் கலைஞர் அவர்களின் வீடு நன்கு பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக உள்ளது.

திருவாரூருக்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வந்தார். மாவட்டத்தில் விவசாயிகளின் நிலையை தெரிந்துகொண்டு அவர்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

மு க ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் வருவதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். திருவாரூரிலிருந்து திருக்குவளை செல்லும் வழியில் அவரை பின் தொடர்ந்து பல மக்கள் வந்தனர். சிறப்பான வரவேற்பை பொதுமக்கள் முதலாவருக்கு கொடுத்தனர்.

குடும்பத்தோடு திருக்குவளையில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லும்போது பின்னவாசல் என்ற ஊரில் திருமணக்கோலத்தில் மணமக்கள் நின்றார்கள். மணக்கோலத்தில் நின்றவர்களை பார்த்தவுடன் முதலமைச்சர் வண்டியை நிறுத்தச் சொல்லி அவர்களிடம் உரையாடினார் அப்பொழுது நீங்கள் எங்கள் திருமணத்தை நடத்தி கொடுங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொள்ள முதல்வரும் சந்தோசமாக காரைவிட்டு இறங்கி மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார். முதல்வரே காரை விட்டு இறங்கி திருமணத்தை நடத்தி வைத்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles