Sunday, May 19, 2024
-- Advertisement--

திருப்பதியில் பத்து நாளில் 29 கோடி உண்டியல் வசூல்..!!! அடேங்கப்பா…!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைகுண்ட ஏகாதேசி ஆன கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை பக்தர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் முதல் முறையாக இம்முறை ஆகம வல்லுநர்கள், ஜீயர்கள் சில பீடாதிபதிகள், மடாதிபதிகள் அனுமதியோடும் ஆலோசனைகளை அனுசரித்தும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது கடந்த 10 நாட்களில் 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தனர். ரூபாய் 300 ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் 1.83 லட்சம் பக்தர்களும் திருப்பதியில் வழங்கிய இலவச தரிசன டோக்கன் மூலம் 90 ,852 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் தரிசித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் 20.82 லட்சம் லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. உண்டியல் காணிக்கை மட்டும் சுமார் ரூபாய் 29 கோடி செலுத்தியுள்ளனர். 50984 அறைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் ரூபாய் 227 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 4.52 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles