Thursday, May 2, 2024
-- Advertisement--

விளக்கேற்றி விஜய்க்கு நன்றி தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள்..!!! மாற்றத்தை கொடுத்த மாஸ்டர் …!!!

தளபதி விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றாவது நாட்களில் 100 கோடியை தொட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

தற்பொழுது 200 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா காலகட்டம் என்பதினால் படங்களை OTT தளத்திற்கு கொடுக்கும் இந்த நேரத்தில் தியேட்டரில் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று பிடிவாதமாக இருந்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்தார் விஜய்.

விஜய்யின் இந்த முடிவுக்கு பல தியேட்டர் உரிமையாளர்கள் பெரிய ஆதரவு கொடுத்தனர். OTT தளத்தில் படங்கள் வெளியானால் தியேட்டருக்கு மக்கள் வரவு குறைந்து விடும். கோடி கோடியாய் தியேட்டரில் பணத்தை போட்டுவிட்டு நிற்கும் பல திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட விஜய் தனது படத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பார்க்க வேண்டும் என்பதில் கறாராக இருந்ததால் மாஸ்டர் திரையரங்கில் ரிலீஸ் ஆனது.

திரையரங்கு உரிமையாளர்களும் கொரோனாவிற்கு பிறகு வெளியான ஒரு சில படங்கள் கொடுத்த பெரும் நஷ்டத்தை பார்த்து அதிர்ந்துபோய் இனி மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்ற அச்சம் ஏற்பட்டு இருந்தது.

மக்களை மறுபடி தியேட்டருக்கு அழைத்து வர மாஸ்டர் வந்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்ததால் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மாஸ்டர் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தனர் மக்கள். விஜயை பார்ப்பதற்காக கொரோனா அச்சத்தை மறந்து மக்கள் தியேட்டருக்கு வர தொடங்கினார்.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருவதால் தியேட்டர் உரிமையாளர்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்து வந்துள்ளனர்.

கும்பகோணத்தில் காசி திரையரங்கம் மற்றும் வாசு திரையரங்கம் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் போட்டனர்.

திருநெல்வேலி ராம் சினிமாஸ் உரிமையாளர் விஜய்க்கு நன்றி கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

திருநெல்வேலியில் உள்ள அலங்கார் சினிமாஸ் தளபதி விஜயின் பெயரை விளக்கால் அலங்கரித்து விஜய்க்கு நன்றி கூறி உள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ஓடி முடிந்த பின் மாஸ்டர் அமேசான் பிரேமில் வெளிவருமாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles