அனைவரது வாழ்விலும் தனக்கென்று ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனை தனது வாழ்நாள் லட்சியமாக எண்ணி சிறுக சிறுக பணம் சேமித்து வீடு எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பயணித்த வருகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் தனது விருப்பப்படி வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
இந்த வகையில் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெல்கம் நகர் பகுதியில் ஒருவர் வித்தியாசமான முறையில் வீடு கட்டி உள்ளார்.
பொதுவாக வீடு வலுவாகவும், பார்ப்போரை கவரும் வகையில் இருக்க வேண்டும். மேலும் நல்ல சிமெண்ட், கம்பிகள் போன்ற மூலப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள வீடானது அடுக்கி வைத்த அட்டை பெட்டிகள் சரிவது போன்று அமைப்பில் வீடு கட்டப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் தென்காசி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த வழியே செல்லும் மக்கள் அந்த வீட்டின் முன்பு நின்று செல்ஃபி புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். இந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீட்டை கட்டிய கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.