Saturday, May 4, 2024
-- Advertisement--

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 2 வயது கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாயோடு வை வைத்து செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றிய செவிலியர்…!!!

கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு செவிலியர் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து குழந்தையை காப்பாற்றி உள்ளார் கேரளா நர்ஸ் ஒருவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் உள்ள திருச்சூரில் நடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயால் இன்றளவும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவிட்டு தற்போது சற்று குறைந்து வருகிறது.

மூன்றாவது அறை எப்பொழுது தொடங்கும் என மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும் இன்றளவும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூரை சேர்ந்தவர் செவிலியர் ஸ்ரீஜா. அவர் நன்மணிக்கார பஞ்சாயத்துக்குட்பட்ட குடும்ப நல மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 2 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஸ்ரீஜாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது குழந்தையை பார்த்த உடனேயே குழந்தைக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஸ்ரீஜா அறிந்து கொண்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பெற்றோரிடம் கூறினார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி உள்ளதையும் அறிந்த ஸ்ரீஜா உடனே தன் வாயோடு வாய்வைத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் அழைத்து முதல் உதவி செய்தார்.

அதனை தொடர்ச்சியாக செய்ததால் குழந்தையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றும் நோக்கில் தனக்கு தொற்று வந்தாலும் பரவாயில்லை குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாயோடுவாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிலியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குழந்தையை சரியான நேரத்தில் அழைத்து வந்ததால் குழந்தை காப்பாற்ற பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த குழந்தை நன்றாக இருக்கிறது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர். அப்படியிருந்த போதிலும் ஸ்ரீஜா கூறுகையில் எனக்கு கொரோனா தொற்று வந்தாலும் பரவாயில்லை என்பதாலேயே நான் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அழைத்தேன் அது கை கொடுத்தது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒரு உயிரை காப்பாற்றும் அதைவிட திருப்தியான காரியம் வேறு எதுவும் இல்லை என ஸ்ரீஜா கூறியுள்ளார். தற்போது ஸ்ரீஜா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles