Monday, May 20, 2024
-- Advertisement--

பெண் விவசாயி வாங்கிய வாங்கி கடனை செலுத்திய நீதிபதி…!!! நெகிழ்ச்சி சம்பவம் உள்ளே.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தர்மகிரி. எந்த பகுதியை சேர்ந்தவர் ரீனா 50. விவசாயி கணவரை இழந்த இவர் வங்கியில் ரூபாய் 50,000 விவசாய கடன் வாங்கினார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுமா 50 என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தார்.

சில தவணை செலுத்திய பின்னர் ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. கடன் தவணையை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. இந்நிலையில் நேற்று கூடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வங்கி அதிகாரி ஒரே தவணையாக ரூபாய் 20 ஆயிரம் செலுத்தினால் கடனிலிருந்து விடுவிப்பதாக கூறினார்.

ஜாமின் அழைத்த சுமாவும் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறினார். அவர்களின் நிலைமையை விசாரித்து உண்மைதான் என்பதை நீதிபதி வெங்கட சுப்பிரமணி தெரிந்து கொண்டார். பின்னர் நீதிபதி வக்கீல்கள் ஆப்சல்ஜா, பிலிப்போஸ் மற்றும் வங்கி மேனேஜர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக 10,000 செலுத்தினால் போதும் என்று முடிவு செய்யப்பட்டது. கடன் தொகையை நீதிபதி, வக்கீல்கள் சேர்ந்து செலுத்தி ரீனா மற்றும் சுமாவை விடுவித்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles