Thursday, May 2, 2024
-- Advertisement--

ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியா மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி மாபெரும் சாதனை படைத்துள்ளது…!!!

இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் களத்தில் விளையாடுகிறது. முதல் முறையாக 1980 இந்திய அணி மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அப்போது ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை அடுத்த அணியுடன் மோதியது.

அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜிம்பாவே, செக்கோஸ் லோவாக்கியா இப்போது செக் குடியரசு ஸ்லோவாக்கியா நாடுகளாக பிரித்துள்ளனர். சோவியத் ரஷ்யா ஆகியவை முறையே தங்கம் வெள்ளி வெண்கலம் வென்றனர். அடுத்த மூன்று இடங்களில் இந்தியா, அயர்லாந்து, போலாந்து ஆகிய அணிகள் இருந்தன. அதாவது இந்தியா நான்காவது இடம் பிடித்தது அப்போது அரையிறுதி போட்டி நடைபெறவில்லை.

அதனால் அப்போது மூன்றாவது முறையாக ஒலிம்பிக் விளையாடும் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற போது 12வது இடத்தை பிடித்தது மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் கடைசி இடம் பிடித்து பரிதாபமான நிலையில் இருந்த இந்தியா. தற்போது அரை இறுதிக்கு முன்னேறி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles