Sunday, May 19, 2024
-- Advertisement--

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசு காக்கும் பல சலுகைகள் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!!! குவியும் பாராட்டுக்கள்.

கொரோனா தொற்றில் இருந்து நாளுக்கு நாள் மக்கள் படிப்படியாக குணம் அடைந்து வந்தாலும் திடீரென்று இழப்புகளும் நிகழ்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது தந்தை மற்றும் தாயை இழந்து தவித்து வருகின்றனர் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வரும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஒரு சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது பாட்டி அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்பொழுது அந்த சிறுவன் அம்மாவின் தாயாரிடம் வளர்ந்து வருவதாகவும் எப்படி இவர்களை நிலைநிறுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை என்று அவர் வருந்துவதாகவும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது இப்படி ஒரு நிலைமையை கடவுள் ஏன் கொடுக்க வேண்டும் என்று மனதை கலங்க வைக்கிறது. இது போன்று கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அதில் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.

அதுமட்டுமல்லாமல் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகை மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் உதவித்தொகை அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும்.

ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்.

அரசு இல்லங்கள் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

உதவித்தொகை அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்பு குழுவால் கண்காணிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொண்டு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles