Thursday, May 2, 2024
-- Advertisement--

டோக்கியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு நடுவராக தகுதி பெற்ற முதல் இந்தியர்…!!! யாருனு தெரியுமா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்காக நடுவராக இந்தியாவை சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமை பெறும் முதல் இந்தியர் அவராவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 23-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் நடுவராக அவர் செயல்பட இருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த தீபா தனது 12வது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடத் தொடங்கி உள்ளார்.

அப்போது குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்த அவருக்கு பயிற்சிக்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை இருப்பினும் முயற்சித்து 2007இல் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றார். 2005 முதல் 2009 வரை குஜராத் மாநில சாம்பியனாக இருந்துள்ளார். பின்னர் தனது வாழ்க்கை ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக மாறியது குறித்து தீபக் காப்ரா கூறுகையில் மிகவும் தாமதமான வயதில் விளையாட்டை தொடங்கியதால் எனக்கான அடிப்படை மிகவும் வலுவானதாக இருக்கவில்லை. எனவே சிறப்பு எதிர்காலம் இருக்காது என்பதை உணர்ந்தேன்.

ஆனாலும் அந்த விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக நடுவராக செயல்பட தொடங்கினேன். இது தொடர்பான படிப்பை 2019 இல் நிறைவு செய்து அதில் சிறப்பிடமும் பெற்றேன். பயிற்சியாளராக எனது முதல் சர்வதேச கனமானது 2010 இல் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆகும். அதைத்தொடர்ந்து முதல் இந்திய நடுவராக 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் செயல்பட்டேன்.

உலகக் கோப்பை உட்பட 20 பிரதான போட்டிகளில் நடுவராக செயல்பட்ட நிலையில் ஒலிம்பிக் போட்டி ஒன்றை விடுபட்டு வந்தது. இந்த நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் நடுவராக பணியாற்ற அழைப்பு வந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்ட போது எனக்கான வாய்ப்பு வீணாகி விடுமோ என அஞ்சினேன். ஆனால் இப்போது போட்டியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார் தீபக் காப்ரா ஆசிய ஜிம்னாஸ்டிக் சங்க தொழில்நுட்ப குழுவில் உறுப்பினராக 2018 நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles