Friday, May 3, 2024
-- Advertisement--

டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோ கோடியா.? ஆச்சிரியத்தில் திரையுலகினர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் டாக்டர். திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் மாபெரும் ஹிட் படம் கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Doctor Tamil Movie Heroine Priyanka Mohan HD Images

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் பிரியங்கா அருள் மோகன். அடுத்தடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கைப்பற்றி வருகிறார். அதோடு இத்திரைப்படத்தில் யோகிபாபு, அர்ச்சனா, தீபா, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமான எஸ்கே புரோடக்சன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நேற்றைய தினம் 50 சதவீத பார்வையாளர்கள் உடன் இப்படம் வெளியானது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தில் நெல்சன் காமெடி சீன்கள் பஞ்சமில்லாமல் கொடுத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் கோலமாவு கோகிலா திரைப்படத்தைப் போலவே டாக்டர் திரைப்படமும் இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் டாக்டர் திரைப்படம் ஒரே நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

இதையடுத்து டாக்டர் திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழகம் முழுவதும் 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இவ்வளவு வசூல் செய்திருப்பது திரை உலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles