Monday, May 20, 2024
-- Advertisement--

பொங்கல் பண்டிகைக்கு வலிமை படத்தை கன்பார்ம் செய்த படக்குழு…!!! வீடியோவால் வெளியான மாஸ் அப்டேட்.

அஜித்தின் வலிமை இன்று சினிமா ரசிகர்கள் மட்டும் எதிர்பார்க்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தினர் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே அஜித்தின் திரைப்படம் வெளியாவதால் எப்படியும் நல்ல வசூலை செய்யும் இந்த ஆண்டு தொடக்கமே தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய தொகையை கலெக்ட் செய்யும் என்று உறுதியுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

சில மாதங்களுக்கு முன்புதான் அஜித்தின் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது காரணம் வலிமை படம் தொடங்கியதும் அதன்பின் கொரோனா வந்து வலிமை படக்குழுவினரை பெரும் சோதனைக்கு ஆக்கியதும் அதிலிருந்து மீண்டு வந்து எப்படி மீண்டும் தொடங்கி இன்று வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்தார்கள் குறிப்பாக அஜித்தின் அசுர உழைப்பு இந்த மேக்கிங் வீடியோவில் காட்டியிருந்தார்கள்.

உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் எனது ரசிகர்களுக்காக எந்த ரிஸ்க் காட்சியிலும் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இன்றுவரை ரிஸ்க்கான காட்சிகளில் தானே முன்வந்து நடித்து உள்ளார்.

1000 சிசி வண்டியை அதி வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து வீலிங் செய்யும் காட்சியில் அந்த வண்டி அஜித் மேலே விழுந்து காயத்தையும் ஏற்படுத்தியது அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அஜித் அந்த காட்சியை மறுபடியும் எடுத்த பின்பு தான் ஓய்வு எடுக்க சென்றாராம். வலிமைக்கு வலிமை சேர்த்து அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தான் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் வலிமை இயக்குனர் ஹச்.வினோத்.

நீண்டநாட்களாக எதிர்பார்த்த வலிமை படத்தை ஜனவரி 13 தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles