Saturday, May 4, 2024
-- Advertisement--

கரடியிடம் இருந்து தனது எஜமானை போராடி கைப்பற்றிய நாய்…!!! கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை சேர்ந்தவர் ராமராஜ் 23 விவசாயி. இவரது மனைவி சித்ரா 20. இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் ராமராஜ் சிறுமுகை அடுத்த குஞ்சப்பனை செட்டில்மெண்ட் உள்ள தோட்டத்தில் வேலை செய்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் ஒரு கரடி தோட்டத்திற்குள் புகுந்தது அதை பார்த்த ராமராஜ் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கரடி அவரது தலையில் தாக்க முயன்றது. அப்போது கைகளால் கரடியை தடுத்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ராமராஜ் அலறியடித்து ஓடிய போது அவரை கரடி விரட்டியது சத்தம் கேட்டு நாய் பப்பி ஓடிவந்து பார்த்தது. தனது எஜமான் கரடியுடன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. பின்னர் குறைத்துக் கொண்டு அவருக்கு அரண் போல் நின்று கரடியை எதிர்த்துப் போராடி எதிர்த்து கரடியை ஆக்ரோஷமாக குறைத்து மிரட்டியது.

இதையடுத்து கரடி குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து அப்பகுதியினர் ராமராஜனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் ராமராஜன் இடம் விசாரித்த போது எனது செல்ல நாய் பப்பி தான் கரடியிடம் இருந்து போராடி என்னை காப்பாற்றியது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles