Monday, May 20, 2024
-- Advertisement--

வலிமை படத்திற்கு சம்பளம் வாங்காமல் வேலைபார்த்த பிரபலம்…!!! யார் தெரியுமா.?

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி இருக்கும் பிரபலத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கார்த்திகேயா, ஹூமா குரேஷி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மொத்த டீமும் இணைந்து வலிமை படத்தில் பணியாற்றி உள்ளது.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை திரைப்படத்தில் அப்டேட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதோடு வலிமை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் வெளியான வேற மாதிரி பாடலும், அம்மா பாடலும் வெளியாகி வேற லெவலில் ஹிட்டடித்தது. இந்த இரண்டு பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் பல பாடல்கள் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டு பாடலுக்கும் அவர் எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என படத்தின் இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த அஜீத் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை வெகுவாக பாராட்டுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles