Friday, May 3, 2024
-- Advertisement--

விஜயின் அடுத்த படத்தின் பட பூஜை தொடங்கியது..!!! செம ஸ்டைலாக வந்த தளபதி..!!! வைரலாகும் புகைப்படங்கள்.

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயர் சூட்டப்படாத படத்திற்கு பூஜை இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் விரைவில் அந்த படம் திரைக்கு வர இருக்கிறது இந்நிலையில் விஜய்க்கு புதுமுக இயக்குனர்கள் கதை சொல்லி வந்தார்கள். விஜய் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாய்ப்பும் கொடுத்தார் ஆனால் வெற்றிமாறன் ஒரு சில கமிட்மெண்ட் காரணமாக விஜய் வைத்து இயக்க முடியாமல் போய்விட்டது சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் எனக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார் நான் தான் ரெடி ஆகணும் சீக்கிரம் விஜய்யுடன் படம் பண்ணுவேன் என்று வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

தற்பொழுது விஜயை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்துள்ளது. கதைக்களத்தை நன்றாக அமைத்து சரியாக பயன்படுத்திக் கொண்டால் நெல்சன் திலீப் குமார் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக நிறைய வாய்ப்புகள் உள்ளது.

தற்பொழுது #thalapathy65 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

விஜய் இந்த படத்திற்காக நன்றாக முடி வளர்த்து தனது கெட்டப்பை மாற்றி செம ஸ்டைலாக உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் ஆனால் படத்தின் கதாநாயகி பூஜா ஹெட்ஜ் கலந்து கொள்ளவில்லை.

பிக்பாஸ் பிரபலம் கவின் கலந்து கொண்டார். விஜயுடன் கவின் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles