Friday, May 17, 2024
-- Advertisement--

வாரிசு இசை வெளியிட்டு விழா எப்போ தெரியுமா ? வாரிசு அரசியல் பற்றி பேசுவாரா விஜய்…!!!

தளபதி விஜய் தமிழ் நாடே கொண்டாடும் நடிகர் தமிழ்நாட்டில் எப்படி இவரைக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு வெளி மாநிலங்களிலும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட விஜய் திரைப்படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்கும்.

விஜய் படங்களுக்கு வெளிநாடுகளிலும் மார்க்கெட் பெரிதாக இருப்பதால் இவரை சினிமா வட்டாரத்தில் வசூல் சக்கரவர்த்தி என்று கூறுவார்கள். குறிப்பாக விஜயின் திரைப்படம் சுமாராக இருந்தாலே பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும்.

விஜய் படம் என்றாலே நம்பி திரையரங்கு உரிமையாளர்கள் வாங்குவார்கள். விஜய் நடித்து சமீபத்தில் வெளியான BEAST திரைப்படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது திரைப்படம் பெரிய வெற்றி திரைப்படம் தான் என்று அந்த படத்தை டிஸ்ட்ரிபூட் செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்களே கூறியிருந்தார்.

BEAST திரைப்படத்தில் நடந்த தவறு மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று கவனமாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள நிலையில் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பிரபல நடிகர் ஷாம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருப்பது வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்கள் கண்டிப்பாக விஜய் அவர்களின் எனர்ஜியான பேச்சு இருக்கும் நானும் அதை எதிர் பார்க்கிறேன். இந்த முறை முப்பது வருடம் திரையுலகில் பயணித்த வாரிசு என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் காத்திருப்பது போல நானும் காத்திருக்கிறேன். ராஷ்மிகா விஜய் ஜோடி ஸ்கிரீனில் பார்க்க அழகாக இருக்கும் இருவருக்கும் 2 பாடல்கள் உள்ளது என்று கூறியவர் வாரிசு கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களும் அனைவரும் டிசம்பர் 24 எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் காரணம் வாரிசு அரசியல் பற்றி பேசுவாரா என்ற ஆர்வத்துடன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles