தளபதி விஜய் இன்றைய காலகட்டத்தில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றால் கண்டிப்பாக அது விஜய் தான். விஜயின் படங்களுக்கு கிடைக்கும் பெரிய வியாபாரம் மற்றும் வரவேற்பு படத்திற்கு படம் அதிகரித்து வருகிறது. “சுறா” என்ற படத்துடன் விஜயே காலி என்று எழுதிய பத்திரிகைகளை இன்று விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று முதல் பக்கத்தில் அவரது படத்தை போட்டு விளம்பரம் செய்யும் அளவிற்கு இருக்கிறது வளர்ச்சி .
விஜயின் கோட்டை என்று சொல்லப்படும் கிரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருந்தார். அதில் தளபதி விஜய் நடித்த படமான “சர்கார்” படத்தினை திரையிட்டு திரை அரங்கின் சவுண்ட் சிஸ்டம் அனைத்தையும் பரிசோதித்தாக ட்விட் போட்டு இருந்தார்.
இந்த தியேட்டரின் உரிமையாளர் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.