விஜய் நடித்து ஏப்ரல் 13ம் தேதி அன்று வெளியாக இருக்கும் படம் தான் பீஸ்ட் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏற்கனவே அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பெரிய அளவில் ஹிட் பாடலாக அமைந்தது. குறிப்பாக அரேபிக் குத்து பாடல் 284 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. விரைவில் 300 மில்லியன் தொட உள்ளது.
பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தது போல இருக்கும் என்றும் விஜய் இந்த படத்தில் RAW ஸ்பை ஏஜென்ட் ஆக நடித்துள்ளார் என்று ஏற்கனவே இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். வழக்கமான விஜய் படங்களை போல் இருக்காது அதே நேரத்தில் ரசிகர்கள் விஜயிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளார். கிட்டத்திட்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் போல இந்த படம் உருவாகி உள்ளதாகவும் படம் நன்றாக வந்துள்ளதாகவும் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பீஸ்ட் படத்தில் விஜய் நடிக்க ஒத்துக் கொள்ளாவிட்டால் அந்த கதையில் வேறு எந்த ஒரு நடிகரையும் வைத்து எடுத்திருக்கமாட்டேன் இது விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்றும் தெரிவித்திருந்தார்.
பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி பிறகு ஒரு வித்தியாசமான விஜய்யை பார்த்ததாக சந்தோஷத்தில் உள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு தளபதி விஜய் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்று செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட்படத்திற்கு வாங்கிய சம்பளம் 80 கோடி என்று கூறப்படுகிறது. இயக்குனர் நெல்சன் 8 கோடி சம்பளம் வாங்குவதாகவும், அனிருத் 4 கோடி சம்பளம் வாங்கியதாகவம் பீஸ்ட்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல்கள் பிரபல பத்திரிகையாளர் ஒருவரால் இணையத்தில் பகிரப்பட்டது.