தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் சில நாட்களுக்கு முன்பு தொண்டர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. விஜயகாந்தை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தார்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி கஷ்டப்படுறாரே என்று கண்கலங்கி பல தொண்டர்கள் தவித்து போய் நின்றார்கள் அந்த அளவிற்கு விஜயகாந்தின் நிலைமை இருந்தது.
சிங்கம் போன்ற கர்ஜனையுடன் இருந்த விஜயகாந்த் அவர்களா இது என்று அனைவரையும் கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது. வந்தவர்களுக்கு எப்போதும் வயிறு நிறைய உணவு வழங்கும் கேப்டன் அவருடைய பிறந்தநாள் தினத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து இருந்தார்.

சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா அவர்கள் பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் அதில் அவரிடம் அரசியல் சம்பந்தமான கேள்விகளை நெறியாளர் முன் வைத்து வந்தார்.
கேள்விகளுக்கு பிரேமலதா கூறியது:

கேப்டன் அவர்கள் யாருக்கும் எந்த கெட்டதுமே நினைக்க மாட்டாரு எதிரியா இருந்தாலும் அவரைப் பற்றி மூன்றாவது மனுஷன் கிட்ட பேசவும் மாட்டார் எத்தனையோ பேர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை அவர் அதைப்பற்றி எல்லாம் எங்கும் பேசியது இல்லை. ஏன் மீடியாக்களில் ஒரு நேரத்தில் கேப்டனை வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள் கேலிகள் வரும் அதை அனைத்தும் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை.
வடிவேல் நிலைமை நினைத்து வருத்தப்பட கேப்டன்:

வடிவேலு அவர்கள் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது கூட ரொம்ப வருத்தப்பட்டார். வடிவேலு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான நடிகர் அவருக்கு வாய்ப்பு கொடுங்க அவரெல்லாம் தமிழ் சினிமாவிற்கு தேவை என்று எல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி உள்ளார்.
கேப்டன்க்கு அப்போது தான் கலைஞர் மீது வருத்தம்:

கலைஞர் அவர்கள் மீது பெரிய மரியாதை கேப்டன் அவர்களுக்கு எப்பவும் உண்டு கலைஞர் அவர்கள் இறந்த செய்தி கேட்டவுடன் கேப்டன் அவர்கள் நொறுங்கி விட்டார் கலைஞர் அவர்களின் சமாதிக்கு சென்று அவர் கண் கலங்கிய விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த அளவிற்கு கலைஞர் அவர்களை கேப்டனுக்கு பிடிக்கும். திமுக ஆட்சி காலத்தில் எங்கள் மண்டபத்தை இடித்தார்கள் அப்போது தான் விஜயகாந்த் அவர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார் என்னிடமே வருத்தப்பட்டார் நான் கலைஞருடன் எப்படி பழகி உள்ளேன் எனக்கே இப்படி செய்து விட்டார்களே என்று வருத்தப்பட்டார்.
தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும் எங்களுடைய சொத்தை விற்று தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அரசியலுக்கு வந்தோம் ஆனால் மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை அப்படி மக்கள் வாய்ப்பு கொடுத்து இருந்தால் நிச்சயமாக தமிழகத்தில் பெரிய மாற்றம் வந்திருக்கும் என்று பிரேமலதா அவர்கள் கூறினார்.
விஜய் அரசியல் வருகை தேமுதிகவுக்கு பாதிப்பா:

பிரேமலதா அவர்களிடம் விஜயின் அரசியல் வருகை உங்களின் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேள்வி கேட்டார்கள் அதற்கு”முதலில் சம்பந்தப்பட்டவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லட்டும் விஜய் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லட்டும் அதன்பின் இதற்கு பதிலை நான் கூறுகிறேன் யார் வந்தாலும் தேமுதிக விற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை” என்று பிரேமலதா அவர்கள் கூறியிருந்தார்.